
மீண்டும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா படத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் கதாநாயகனுக்கு நண்பனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா படம் திருப்தியாக இல்லை என்பதால் படத்தை திரும்ப எடுக்க போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
ஆதித்யா வர்மா என்ற பெயரில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் படம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
துருவுக்கு ஜோடியாக மாடல் அழகி பனிதா சந்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் துருவுக்கு நண்பனாக கோலமாவு கோகிலா, மீசைய முறுக்கு படத்தில் நடித்த அன்புதாசன் நடிக்கிறார். இவர் யூடூப்பில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply