
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தளபதி 63 படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இரண்டு மாதங்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது மேலும் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் இணைந்துள்ளார். படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ள்ளனர்.
நண்பன் கதிர்
விஜய்யின் நெருங்கிய நண்பராக கதிர் நடிக்கிறார். விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
கதை
தற்போது படத்தின் கதை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தின் பெயர் விஜய் கதாபாத்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்றும், ஆனாலும் படத்தின் பெயர் மாஸாக இருக்கும் என்றும் தெரிகிறது.
விஜய் அரசியல்
படத்தில் விஜய் அரசியல் பேசுவார் என்றும், ஆனால் அது கால்பந்தாட்ட விளையாட்டில் இருக்கும் அரசியலை பற்றியதாக இருக்கும்.
கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் இப்படத்தில் நடித்து வருவதாகவும், அதற்காக தனியாக கால்பந்து விளையாட சிறப்பு பயிற்சி எடுத்து வருகின்றார் எனவும் தகவல்கள் வெளி வருகின்றன.
படத்தில் நண்பன் கதிர்க்கு நடக்கும் அநியாயத்தை எதிர்த்து நடக்கும் நிகழ்வுகளை கொண்டு படம் விறுவிறுப்பாக செல்லும் என தோன்றுகிறது.
நட்பு, காதல், ஆக்ஷன், பழிவாங்குதல் என படம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
சாட்டிலைட் உரிம்
ஏற்கனவே தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply