
இந்த கொரோனா வைரஸ் பரவல் மட்டும் இல்லையென்றால் மாஸ்டர் திரைப்படம் இந்நேரம் வெளிவந்திருக்கும். இதுதான் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களின் புலம்பல்.
ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருந்தது.
இதனால் முன்னரே ஆடியோ ரிலீஸ், ப்ரோமோஸ், லிரிக் வீடியோஸ்
என வெளியாகி வந்த நிலையில் தற்போது கொரோனாவினால் உலகமே இப்பொழுது லாக் டௌனில் உள்ளது.
மாஸ்டர் படம் மட்டுமில்லாமல் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
படக்குழு இப்பொழுது அடுத்த தேதியையும் அறிவிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
கொரோனா வைரஸ் லாக் டௌன் என்பதால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய தேதிகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த லாக் டௌன் காலம் முடிவடைந்ததும் தேங்கி இருக்கும் அனைத்துப் படங்களையும் ரிலீஸ் பண்ணுவது என்பது பெரிய சவாலான செயல் தான்.
அதிலும் முக்கியமாக மாஸ்டர் மட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, விக்ரம் நடிப்பில் கோப்ரா, ஜெயம் ரவியின் நடிப்பில் பூமி என பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
அதனால் லாக் டௌன் முடிந்ததும் இப்படங்களுக்கு சரியான
தேதிகளைக் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.
இன்னும் மிக முக்கியமாக பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களின் நடுவில் ஏராளமான நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்களும் தேங்கி இருக்கின்றன.
பெரிய படங்களுடன் சேர்த்து சிறிய மற்றும் நடுத்தரப் படங்களையும் ரிலீஸ் செய்தால் அந்தப் படங்களுக்கு வரவேற்பும் வசூலும் சரியாக இருக்காது.
எது எப்படி இருந்தாலும், விஜய் மாதிரி பெரிய நடிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை இந்த லாக் டௌன் கொஞ்சமும் குறைக்கவில்லை.
“வெய்ட்டிங்லயே வெறி ஏறுது” என சொல்லும் வகையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மாஸ்டர் இன்றைக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் #MasterFDFS என்கிற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
“என் கையில் இந்நேரம் FDFS-கான மாஸ்டர் டிக்கெட் இருந்திருக்க வேண்டும்”.
“மாஸ்டர் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருந்தால் இப்படித் தான் திருவிழாவாக இருந்திருக்கும்” என்று சில புகைப்படங்களை பதிவிட்டு புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஃபன் ஆக சில மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.
அதில் ஒரு மீம்ஸில் படத்தின் ட்ரைலரையாவது ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்கின்றனர்.
படம் ரிலீஸ் ஆனாலும் ஆகவில்லை என்றாலும், அனைவரும் லாக் டௌனில் இருந்தாலும் கொரோனா வைரஸ் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தாலும், ரசிர்கர்களிடையே அவர்களின் அபிமான நடிகர்களின் படங்களின் எதிர்பார்ப்பையும், ஹைப்பையும் கொஞ்சமும் குறைக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
Leave a Reply