
விஜய் ஆண்டனியின் அடுத்த படத்திற்கு காக்கி என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜெய், சத்யராஜ் போன்றோரும் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திமிரு புடிச்சவன் படத்திற்கு அடுத்ததாக கொலைகாரன் வெளியாக உள்ளது. இதனை அடுத்து அக்னிச் சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட ஐந்து படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்த படத்திற்கு காக்கி என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததை தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முதல் முறையாக விஜய் ஆண்டனி இப்படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply