
தமிழ் சினிமாவில் விஜய் நடிக்க வந்து டிசம்பர் நான்கோடு 27 வருடங்கள் ஆவதை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் சார்பில் உருவாக்கப்பட்ட ‘காமன் டீபி’யை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் டிசம்பர் 4-1992 அன்று வெளியாகியது.
இயக்குனர் மகன் என்பதாலே வாய்ப்பு கிடைத்ததாக பலரும் கேலி பேசிய நிலையில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தார். பூவே உனக்காக படத்தின் மூலம் வெற்றியை தன வசமாக்கியவர். அதன் பின் தோல்விகளை எப்படி வெற்றி படிக்கட்டுகளாக மாற்றுவது என தெரிந்து கொண்டார்.
2000ம் ஆண்டு முதல் பெரும்பாலும் இவரது படங்கள் வெள்ளிவிழா கண்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இணையான வெற்றியையும் பெயரையும் விஜய் படங்கள் பெற்றது.
விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் வேற எந்த நடிகருக்கும் கிடையாது என்று கூட கூறலாம்.
தமிழ்நாட்டில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் போன்றே கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு நேரடி மலையாளப்படத்தில் கூட நடிக்காதவர் விஜய் இருப்பினும் வேலாயுதம் திரைப்படம் கேரளாவில் நூறு நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஓடியது. அடுத்த சூப்பர் ஸ்டார் என ஊடகங்கள் வர்ணித்த போதும் தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என கூறிவிட்டார்.
இந்த நிலையில் விஜய் சினிமாவில் கால்பதித்து 27 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் உருவாக்கிய காமன் டீபியை மோகன் ராஜா வெளியிட்டு உள்ளார். விஜய் நடித்த வேலாயுதம் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply