நிதின் சத்யாவின் ஷ்வேத் புரொடக்ஷன் சார்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடக்க விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதின் சத்யா தயாரிக்கும் இப்படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.
வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் நாயகியாகவும், ஈஸ்வரி ராவ், பூர்ணா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும், வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தில் வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.
Leave a Reply