
விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தின் ஒரு பாடல் தான் “வாத்தி கமிங்”.
இந்தப்பாடலோட லிரிக்ஸ் வீடியோ ரிலீஸ் ஆன பொழுது இந்தப்பாடலில் வரிகளே இல்லை, வெறும் வாசிப்பு தான் என்ற பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியானது. ஆனால் வழக்கம்போல் எவ்வளவு எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் அப்பாடலின் வெற்றியை எவராலும் தடுக்க முடியவில்லை.
யூடியூபில் அந்த லிரிக் வீடியோ இப்போதைய நிலவரப்படி 24M வியூஸ் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.
கோரோனோ பாதிப்பில் திரையுலகம் லாக் டவுனில் உள்ளதால் மாஸ்டர் படம் வெளிவரும் தேதி கண்டிப்பாக தள்ளிப்போகும் என்பது நாமனைவரும் அறிந்த உண்மையே.
எது எப்படி இருந்தாலும் மாஸ்டர் படத்தோட ஒவ்வொரு அப்டேட்டையும் ஒரு திருவிழா போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
படத்தின் பாடல்கள் அனைத்தும் முன்னரே பயங்கர ஹிட்.
இப்பொழுது லாக் டவுனில் பிரபலங்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதனால் அவர்களனைவரும் என்ன செய்றாங்கன்னு முன்னரே 2 வீடியோஸ் போட்டிருந்தோம்.
உங்கள் அபிமான பிரபலங்கள் ரகுல் ப்ரீத், ராஷி கண்ணா, தமன்னா, ஹன்சிகா அனைவரும் லாக் லாக் டௌன் நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்று முன்னரே ஒரு வீடியோவில்
போட்டிருந்தோம்.
இன்னொரு வீடியோவில் உங்கள் அபிமான ஜோடிகள் எப்படி நேரத்தை செலவிடுகிறார்கள் என்று சொல்லிருந்தோம்.
லாக் டவுனில் இன்றைக்கு வீடியோவில் நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களும் அவரது மகள் இந்திரஜா ஷங்கரும் ஒரு நடன வீடியோ ஷேர் பண்ணிருக்கிறார்கள்.
அவர்கள் நடனம் ஆடியிருக்கிற பாடல் மாஸ்டர் படத்துல வருகிற வாத்தி கமிங் பாடல் தான். இருவரும் முகத்தில் மாஸ்க்கோட முழு எனர்ஜியோட உடல் அசைவும் ஒரே மாதிரியாக நடனம் ஆடியிருக்கிறார்கள்.
அதிலும் இந்திராஜாவோட நடனம் மிகவும் அருமையாக உள்ளது. அவரிடம் நல்ல நடனத்திறன் உள்ளதென்று இந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது.
கோரோனோ லாக் டவுன்ல அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒரு பொழுதுபோக்கு விடியோவாக மட்டுமில்லாமல், இந்தக் கோரோனோ நேரத்தில் விழிப்புணர்வையும் உண்டாக்குகிறது. ஏனென்றால் அவர்கள் இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு நடனம் ஆடுகிறார்கள்.
இந்த வீடியோ ட்விட்டரில் மிகவும் அருமையான வரவேற்பை பெற்றுள்ளது.
Leave a Reply