நடிகை திரிஷா நடிக்கும் புதிய படமான ராங்கி தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை போன்ற படங்கள் வெளியாக உள்ள நிலையில் 1818, பரமபதம் போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
ராங்கி படத்தில் திரிஷா தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்குகிறார்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய நிலையில் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற உளளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திரிஷா படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல உள்ளார் என படக்குழு கூறியதாக தெரிகிறது.
தற்போது ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Leave a Reply