
பேட்ட மற்றும் 96 வெற்றியை தொடர்ந்து திரிஷாவின் அடுத்த படத்தின் பூஜை மற்றும் படத்தின் பெயர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய எம்.சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் படத்திற்கு ராங்கி என்று பெயர் வைத்துள்ளனர்.
இதனை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திரிஷா தற்போது 1818, கர்ஜணை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள் வருவதால் இப்படத்தில் தைரியமான பெண்ணாக திரிஷா வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Leave a Reply