விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் இன்று நவம்பர் 16 வெளியாகிறது.
இயக்குனர் கணேஷா இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் முழுவதும் விஜய் ஆண்டனி போலீஸ் உடையில் கம்பீரமாக மீசையை முறுக்கிட்டு மிரட்டுறார் .
ஸ்நீக் பீக்
படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. போலி ஆசாமி ஒருவர் சமூக சேவகர் என்ற போர்வையில் சாக்கடையை சுத்தம் செய்யாமல் , அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு அரசை விமர்சித்து லைக் வாங்குகிறார்.
அப்போது அங்கு வரும் காவல் துறை அதிகாரியான விஜய் ஆண்டனி சாக்கடையை சுத்தம் செய்ய வாங்க என அழைக்கிறார், அப்போது போலி ஆசாமி தப்பித்து ஓடுகிறான்.
பின்னர் போலீஸ் உடையுடனே விஜய் ஆண்டனி களமிறங்கி சாக்கடையை சுத்தம் செய்கிறார் மற்றும் ஸ்டேஷனில் இருக்கும் எஸ்.ஐ. உள்ளிட்டோரையும் வரவழைத்து சுத்தம் செய்ய வைக்கிறார்.
திமிரு புடிச்சவன் படம் வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என நம்புவோம்.
Leave a Reply