
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
நடிகர் சூர்யா காப்பான் படத்தைத் தொடர்ந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரரைப் போற்று படத்தின் திரைக்கதை இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் வெற்றிமாறன் இதனை உறுதி செய்துள்ளார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் வெற்றி மாறன் இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
சூர்யா, வெற்றிமாறன் முதல் முறையாக இணைந்து உள்ளதாலும் ஜல்லிக்கட்டு தொடர்புடைய படம் என்பதாலும் இந்தப் படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1959-ம் ஆண்டு வெளியான சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை தழுவி இப்படம் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
Leave a Reply