
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் திரைக்கதையை படத்தில் நடித்து வரும் இந்தி நடிகர் நடிகர் ஒருவர் தந்து பேட்டியின் போது லீக் செய்துள்ளார்.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார் படத்தின் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பது உறுதியானது.
மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் இந்தி நடிகர்கள் பலரும் இணைந்துள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் கசியத்தொடங்கியது.
இந்நிலையில் இந்தி நடிகர் தலீப் தாகிர் படத்தின் கதையை ஒரு பேட்டியில் கசியவிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள தாதா மற்றும் ரவுடிகளை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.
தீவிரவாதிகளையும் தாதாக்களையும் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்றும் மேலும் இப்படம் அதிரடியான சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்சன் படம் என்றும் தெரியவந்துள்ளது.
அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply