
சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படமான எஸ்கே 16 படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்கள் இணைந்துள்ளனர்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் இப்படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது தவிர இயக்குனர் பாரதிராஜா இபபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தில் சதுரங்க வேட்டை நட்ராஜ் மற்றும் ஆர் கே சுரேஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் இப்படத்தின் மூலம் மீண்டும் ஆறு வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்க படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
Leave a Reply