
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் படத்தின் கதைக்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. ஜெயம் ரவி நடித்த மிருதன், டிக் டிக் டிக் படத்தினை அடுத்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் இது.
இப்படத்திற்கு டெடி என்று பெயரிட்டுள்ளனர் மேலும் கரடி ஒன்று முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. படத்திற்கு சக்தி சௌந்தர் ராஜனுக்கு பிடித்த இசையமைப்பாளரான டி இமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி தகவல் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் கதாநாயகி குறித்து தகவல் மட்டும் மிகவும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது எனினும் படத்தில் ஆர்யாக்கு ஜோடியாக நிஜ வாழ்க்கை ஜோடியான சாயிஷா தான் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

கஜினிகாந்த் படத்திற்கு பிறகு மற்றும் கல்யாணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க போகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply