
சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெங்கட் பிரபு தயாரிக்கும் “ஆர்.கே.நகர்” படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக சனா அல்தாஃப் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி இப்படத்தினை தயாரித்துள்ளது.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தில் இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா போன்ற நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பிரேம்ஜி அமரன் இசையில் வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் மேற்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபு ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் படம் வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
இந்த சந்தோஷமான தருணத்துல என்ன சொல்ல வர்ரேன்னா!! #ஆர்கேநகர் படம் வர 12 ஆம் தேதி ஏப்ரல் வெளிவருது! தியேட்டர்ல ஓட்டு போட ரெடியா இருங்க!!🙏🏼 #Rknagar @badri_kasturi @blacktktcompany @saravanarajan5 @actor_vaibhav @Premgiamaren @Cinemainmygenes @subbu6panchu @vasukibhaskar @Muzik247in
Leave a Reply