
மேயாத மான் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகவானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இப்படத்தின் மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்ற இவர் அதனை தொடர்ந்து நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் மாஃபியா உள்ளிட்ட படங்களும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வரும் நிலையில் பொம்மை, ஓ மணப்பெண்ணே மற்றும் தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்ததாக பிரியா பவானி ஷங்கர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரை சீரியல் மூலம் இவர் முதன் முதலில் நடிப்பு துறையில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply