
பிரபுதேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் பஹிரா படத்தோட முதல் லுக் போஸ்ட்டரை நடிகர் தனுஷ் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த போஸ்டரில் பிரபுதேவா மொட்டை தலையுடன் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். பஹிரா என்பது ஜங்கிள் புக்கில் மௌக்லி உடன் வரும் கருஞ்சிறுத்தை கதாபாத்திரத்தின் பெயர்.
இப்படத்தை திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
முதல் லுக் போஸ்டரில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் பிரபுதேவா இருக்கிறார். மொட்டை தலையோட மூணு லென்ஸ் உள்ள ஒரு கூலிங்கிளாஸ் போட்டுருக்கிறார்.
அவரோட மொட்டைத் தலையில் இரத்த சொட்டுகள் படிந்திருக்கிறது. இதை விட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்த கூலிங் கிளாஸ் லென்ஸில் ஒவ்வொரு லென்ஸ்லயும் ஒவ்வொரு பிரதிபலிப்பு இருக்கிறது. அதைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்.
ஒரு லென்ஸில் காரும், மற்றொன்றில் ஒரு டிஜிட்டல் கடிகாரமும். மற்றொன்றில் ஜங்கிள் புக்கில் மௌக்லி உட்காந்திருத்தல் போலவும் பிரதிபலிப்பு தெரிகிறது.
இந்த படத்தில் மேலும் பல ஆச்சரியங்களும், எதிர்பார்ப்புகளும், திருப்பங்களும் உள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
இந்தக் கதையை பிரபு தேவாவிடம் முதலில் கூறிய பொழுது, அவருக்கு மிகவும் பிடித்தது மட்டுமில்லாமல், இப்படத்தின் ஒரு காட்சிக்காக அவர் தலையை மொட்டை அடித்துக்கொள்ள சம்மதித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் ஐந்து கதாநாயகிகள் உள்ளனர்.லீட் ரோலில் அனேகன் படத்தில் தனுஷ் உடன் இனைந்து நடித்த அம்ரியா தஸ்தூர் நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கதாநாயகி காயத்ரி.
இவர்களைத் தவிர இன்னும் மூன்று கதாநாயகிகள் படத்தில் உள்ளனர். இந்த மூன்று கதாப்பாத்திரத்திற்கும் மூன்று புது முகங்கள் நடிக்க உள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் லாக் டவுன் ஆனதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதலால் படம் எப்போது வெளிவரும் என்று இப்போதைக்கு சொல்ல இயலாது.
ஆனால் படத்தைப் பற்றி கிடைத்திருக்கும் இந்த தகவல்கள் மிக ஸ்வாரயமாக உள்ளது.
Leave a Reply