நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். அவள் படத்தை இயக்கிய இயக்குநர் மிலந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.

கவிதாலயா நிறுவனம் தயாரித்து ரஜினி நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றி படம் நெற்றிக்கண். எனவே இப்படத்தின் தலைப்பை கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து பெற்று நெற்றிக்கண் என பெயர் வைத்துள்ளனர்.
நயன்தாரா இப்படத்தில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார் என்றும், மேலும் இப்படம் பிளைண்டு என்ற கொரியன் படத்தின் ரீமேக் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐரா, மிஸ்டர் லோக்கல் மற்றும் கொலையுதிர் காலம் போன்ற படங்களின் தொடர்த்தோல்விகளால் நயன்தாரா இப்படத்தின் கதைக்கருவை கவனமாக தேர்வு செய்து இருப்பார் என்று நம்புவோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் இப்படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply