
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரைமில் நேரடி ரிலீஸ் ஆகவிருக்கும் பென்குயின் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ட்ரைலரை மோகன்லால், தனுஷ் மற்றும் நானி ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.
ஜூன்19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள இப்படத்தில் கீர்த்தி கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீஸர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகஉள்ளதால் அந்தந்த மொழிகளிலுள்ள முன்னணி நடிககர்களை கொண்டு ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் நானியும், மலையாளத்தில் மோகன்லாலும், தமிழில் தனுஷும் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு உள்ளனர்.
அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply