
நடிகர் விஜயின் தளபதி 63 படம் தீபாவளிக்கு வெளியிடுவதற்கு வேலைகளும் படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் மிக முக்கிய காட்சிக்கான படப்பிடிப்பின் போது சென்னையில் ஒரு பிரபலமான கல்லூரியில் தளபதியை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று எனினும் படத்தில் நயன்தாரா தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பில் நேற்று இறங்கியுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பில் இருப்பார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் கதிர், டேனியல் பாலாஜி, விவேக் மற்றும் யோகி பாபு இணைந்திருக்கின்றனர்.
இப்படத்தினை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். தெறி மற்றும் மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தளபதி மற்றும் அட்லீ இணையும் முன்றாவது படம் இது. இந்த படம் பக்கா மாஸ் மற்றும் கமர்சியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மெர்சல் படத்திற்கு பிறகு இந்த ஜோடியுடன் மறுபடியும் ஏ ஆர் ரஹ்மான் இணைகிறார். படத்திற்கு ஒப்பளிப்பதிவாளராக ஜி.கே விஷ்ணு களமிறங்குகிறார். கல்பதி எஸ். அகோரம், கல்பதி எஸ். கணேஷ், மற்றும் கல்பதி எஸ். சுரேஷ் இணைந்து ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
Leave a Reply