
விஜய்-விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா லாக் டௌன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை 5 மொழிகளில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளதாக ஐநாக்ஸ் தியேட்டர் நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது.
விஜய் நடித்துள்ள படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தாலும் இதுவரை அவரது படங்கள் அணைத்து மொழிகளிலும் வெளியாக வில்லை.
பிகில் திரைப்படம் வெளியான போதே அட்லீ இதை தெரிவித்து இருந்தார். அடுத்த முறை விஜய்யை வைத்து படத்தை இயக்கினால் அது கண்டிப்பாக பான் இந்தியா ரிலீஸ் படமாகத்தான் இருக்கும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்ப்பின் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய ஏதுவாக அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய நேரம் கிடைத்து உள்ளது எனவே படக்குழு அந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாளன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக் டௌன் முழுமையாக முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் படக்குழு சார்பில் வெளியாகலாம்.
Leave a Reply