
தற்போது கோலிவுட்டில் தேவதை போல் வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் அறிமுகமானவர். அதையடுத்து தெலுங்கிலும் இறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. நடிகை அசின் போன பாதை போல் இவருக்கும் அமைந்துள்ளது.
1950 களில் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணியினை, ஆசியாவிலேயே முதல் நாடாக அரையிறுதி வரை கொண்டு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் சுயசரிதை ஹிந்தியில் படமாக்கபடவுள்ளது.
படத்தில் பயிற்சியாளராக அஜய் தேவ்கன் நடிக்கிறார் எனினும் கீர்த்தி சுரேஷ் முக்கிய மற்றும் கடினமான கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது. இந்த படத்தினை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் இறங்கவுள்ளார். அங்கும் அவர் தனக்கென ஒரு இடத்தினை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply