
இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்க உள்ளது. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை பற்றி தகவல் ஏற்கனவே வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் இந்த படத்தில் இணைய போவதாக தற்போது தகவல் வெளி வந்துள்ளன. பொன்னியின் செல்வனான ராஜா ராஜா சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்தினம் அவர்களின் கனவு படமான இதில் விக்ரம். ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன். ஐஸ்வர்யாராய் என பலர் நடிக்க இருக்கின்றனர். மேலும் அனைவருக்கும் சரித்திர கால சண்டை பயிற்சி மற்றும் நடை உடை பாவனைக்கான பயிற்சிகளும் அளிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Leave a Reply