
காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
காதலர் தின வாழ்த்துக்களுடன் தான் இயக்கும் புதிய படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் ஒரு முக்கோண காதல் கதையே இப்படத்தின் கதை என தெரிகிறது.
நானும் ரௌடி தான் படம் ஹிட்டான பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் ரவிச்சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டி வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ரவுடி பிக்சர்ஸ் மூலம் விக்னேஷ் சிவனே தயாரிக்கிறார்.
ஆக மொத்தம் நயன்தாராவையும் சமந்தாவையும் மோத விட்டு காத்துவாக்குல ரெண்டு காதலுக்கு எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறார் விக்னேஷ் சிவன்!.
Leave a Reply