காற்றின் மொழி வெற்றியை தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படமான ராட்சசி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இப்படத்தை புதுமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கியுள்ளார். ராட்சசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஒரே நாளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியராக கீதா ராணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் தைரியமான பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சத்யன், அருள்தாஸ், பூர்ணிமா பாக்யராஜ், கவதா பாரதி, ஹரிஷ் பரேடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜூன் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply