
தமிழ் சினிமா துறையில் ஒரு பப்லியான நடிகை ஹன்சிகா. இரண்டு வருடத்திற்கு முன்னர் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ஹன்சிகா.
அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் சற்றுக் குறைந்து விட்டது.
ஆனாலும் அவரின் மௌவுசு குறையவில்லை. படத்தில் நடித்து கொண்டிருந்ததை விட இப்பொழுது எடை குறைந்து , ஒல்லியாக கலக்கலாக உள்ளார்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ஹன்சிகா.
பயணமானாலும், விளம்பர படப்பிடிப்பாக இருந்தாலும், பொழுது போக்கிற்காக எது செய்தாலும் தனது ரசிகர்களுக்கு சோசியல் மீடியாவில் தவறாமல் அப்டேட் கொடுத்து விடுவார் நடிகை ஹன்சிகா.
சமீப காலத்தில் தென் இந்திய நடிகைகளிலேயே தனக்கென்று பிரத்யேகமாக GIFs பெற்ற முதல் நடிகை என்கிற பெருமையைப் பெற்றவர் ஹன்சிகா.
ஆம். ஹன்சிகாவோட GIF இமோஷன்ஸ் அனைத்தும் வாட்ஸப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் சேட் செய்யும் பொழுது நாம் உபயோகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இன்றைய செய்தி என்னவென்றால் ஹன்சிகா தனக்கென்று ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளார். லாக் டௌனில் இருப்பதனால் சேனல் ஆரம்பிக்க நேரம் கிடைத்திருக்கலாம்.
சேனலின் முதல் வீடியோவில் அவர்களோட GIF பற்றி சொல்லிருக்கிறார். ஷூட் செய்த காட்சிகள் மற்றும் அந்த ஷூட்டிங்கில் அவருக்கு உதவி செய்த குழுவை அறிமுகப்படுத்தி நன்றியும் தெரிவித்துள்ளார்.
சேனல் மற்றும் வீடியோ லைவ் ஆகிய சில மணி நேரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றுள்ளது. இதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை இல்லையா?
சமீபத்தில் தான் நடிகை திரிஷா ஒரு கலக்கலான டிக் டாக்கில் என்ட்ரி கொடுத்தார்.
லாக் டௌனில் வழக்கமான ஷூட்டிங் இல்லாததால், நடிகர் நடிகையர்கள் புதுப்புது விஷயங்களை முயற்சி செய்வதைக் காண முடிகிறது.
இது அவர்களுக்கும், அவர்களுடைய ரசிகர்களுக்கும், லாக் டௌன் சமயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.
Leave a Reply