
கொரோனா வைரஸினால் நாம் அனைவரும் லாக் டவுனில் உள்ளோம். வேலைகள் அனைத்தும் அப்படியே நின்று விட்டது என்ற கவலை ஒரு புறம்.
நமது வழக்கமான வேலைகளை செய்ய இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலைமை மற்றொரு புறம். போர் அடித்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இந்த லாக் டவுனில் நமது பிரபலங்கள் விதவிதமாக பொழுதைக் கழிக்கின்றனர்.
இதைப்பற்றிய விவரங்களை Weekendpopcorn சேனலின் முந்தைய வீடியோஸ் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இன்றையச் செய்தி நடிகை திரிஷாவைப் பற்றியது. மிகவும் பிரபலமான டிக் டோக் என்கிற செயலியில் நுழைந்துள்ளார் நடிகை திரிஷா.
திரிஷா தனது முதல் டிக் டோக் வீடியோவை அப்லோடு செய்துள்ளார். முதல் வீடியோவிலேயே மிகவும் அசத்தலான என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை திரிஷா.
மேகன் தீ ஸ்டால்லியனின் மிகவும் பாப்புலரான சவாக்கே என்கிற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் நடிகை திரிஷா.
அவருடைய நடன அசைவுகளெல்லாம் மிகவும் கலக்கலாக பப்லியாக உள்ளது. பர்ப்பில் டாப்சும் பிளாக் ஷார்ட்ஸும் அணிந்துகொண்டு கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு மிகவும் அழகாக உள்ளார் நடிகை திரிஷா.
அந்தப் பாட்டோட பெயர் மட்டும் சவாக்கே இல்லை. அவருடைய நடன அசைவுகளும் சவாக்கேவாகத்தான் இருக்கிறது.
மிகவும் சர்வசாதாரணமாக, அசால்ட்டாக, ஸ்டைலிஷாக ஒரு வீடியோவைப் போட்டு ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை திரிஷா.
அவருடைய டிக் டோக் ப்ரொபைலுக்கு பாலோவெர்ஸ் குவியப் போவது உறுதி. இதுமாதிரியான பிரபலங்களின் நடனங்களும் வீடியோஸும் ரசிகர்களின் மனதில் வரவேற்பைப் பெற்றாலும் , மறுபுறம் அவர்கள் கடுப்பாவதும் உண்மை தான்.
கொரோனா லாக் டவுனில் அனைத்து மக்களும் வாழ்வாதாரம் இழந்து, வருமானம் இழந்து சரியான உணவு இல்லாமல் தவிக்கும் பொழுது , இவங்களுக்கு இதெல்லாம் தேவையா என கமெண்ட்ஸும் வரத்தான் செய்கிறது.
எது எப்படி இருந்தாலும், அவரவர் அவரவருக்கு ஏற்ற மாதிரி லாக் டவுன் நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எவ்வளவு தான் கொரோனா வைரஸ் சீரியசான விஷயமாக இருந்தாலும், தினசரி மனசுக்கு பாசிட்டிவான. சந்தோஷமான விஷயங்கள் இருந்தால் தான் லாக் டவுன் சமயத்தை ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
Leave a Reply