சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்தால் ரசிகர்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும் எனவும் படப்பிடிப்பு புகைப்படங்கள் எளிதில் வெளியாகும் எனவும் கருதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஆனால் எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் அங்கே ரசிகர்கள் கேமராவுடன் கூடிவிடுகிறார்கள்.
கபாலி, காலா போன்ற படங்களின் படப்பிடிப்பு போட்டோக்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்த நிலையில் தர்பார் படத்தில் போட்டோக்கள் வெளியாகாமல் தடுக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பல்வேறு ஏற்பாடுகள் செய்து இருந்தார்.
துணை நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க பட்டு இருந்தது. இந்நிலையில் தினம் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 30-ந் தேதி முதல் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply