
குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்கும் ஆர்யா அப்படத்திற்காக தனது உடலமைப்பை 7 மாதங்களில் எப்படி மாற்றியுள்ளார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இரட்டை வேடங்களில் மாகமுனி மற்றும் காப்பான் போன்ற படங்கள் ஆர்யா நடித்து சென்ற ஆண்டு வெளியானது. அடுத்ததாக சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி என்ற படத்திலும் ஆர்யா சயீஷாவுடன் இணைந்து நடித்து உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தற்போது ஆர்யா தனது 30-வது படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக ராமச்சந்திரா ராஜுவும், ஜோடியாக துஷாராவும், கலையரசன் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் படக்குழு இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை.
இப்படம் 1970-ல் வடக்கு மெட்ராஸில் இருந்த குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிப்பதற்காவே தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பதிவில் 7 மாதங்களுக்கு முந்தைய புகைப்படத்தையும் இப்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கும் ஆர்யா 7 மாதங்களாக குத்துச்சண்டை மற்றும் உடற்பயிற்சி செய்ததன் தாக்கம் இது எனவும், தனது பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது என்றும் கூறியுள்ளார். லவ் யூ ஆல் எனவும் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் மாறி இருக்கும் ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், திரைத்துறை நண்பர்களும் ஆர்யாவை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply