
வெற்றி படமான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் தற்போது குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சுந்தர் சி, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் மற்றும் ஆர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்த நிலையில் இரண்டுமே வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
நடிகைகளாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடித்து வரும் வேளையில் தற்போது ஆர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
25 நாட்கள் படப்பிடிப்பு ராஜ்கோட்டில் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை முதல் பாகத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் அரண்மனை 2016-ம் ஆண்டு வெளியானது.
முதல் இரண்டு பாகத்தையும் சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்நிலையில் மூன்றாவது பாகத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்று தகவல் வெளியான நிலையில் இப்படத்தையும் சுந்தர். சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்று தெரிகிறது.
இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய் படமாக இருக்கும் எனவும் முந்தைய பாகங்களுக்கும் இப்படத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
சத்யாவின் இசையில் இப்படத்தை சுந்தர் சி இயக்கி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply