
உடல் எடையை குறைக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்ட அனுஷ்கா பாகமதி படத்திற்க்கு பிறகு மீண்டும் கதை கேட்க ஆரம்பித்துள்ளார் கூடவே ‘சைலென்ஸ்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த சைலென்ஸ் படம் நான்கு மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் சைலென்ஸ் படம் திரில்லர் படம் ஆகும்.
சைலென்ஸ் படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் ஒரு ஆன்மீக படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கடவுள் ஐயப்பனை பற்றிய கதையாகும்.
சந்தோஷ் சிவன் செக்க சிவந்த வானம், ஸ்பைடர், துப்பாக்கி, இராவணன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியுள்ளார் மற்றும் தற்போது ரஜினி கதாநாயகனாக நடிக்கும் ஏ ஆர் முருகதாஸ் படத்திலும் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றவுள்ளார்.
இனம், உறுமி, மல்லி போன்ற படங்களை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார் மற்றும் இப்பொழுது மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.இந்த படத்திற்க்கு பிறகு ஐயப்பனை பற்றிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்த ஆன்மீக படத்திற்க்கு இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் கோகுலம் கோபால் எனவும் படத்தின் பட்ஜெட் 100 கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது.
Leave a Reply