
தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாள் அன்று இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply