சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் இப்படத்தில் நடிகை நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் அனிருத் இசையமைப்பில் படம் தயாராகி வருகிறது.
லைகா நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இளமையான தோற்றத்தில் ரஜினி உடற்பயிற்சி செய்வது போல் வெளியான இப்போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
28ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது
Younger, smarter, wiser, tougher… Thalaivar in a never seen before Avatar #DarbarSecondLook… https://t.co/Ssj5YJrDgh
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 11, 2019
Leave a Reply