
லாக் டௌன் நேரத்தில் பொழுதைக் கழிப்பது மிகவும் கடினமான விஷயம். எவ்வளவு தான் நாம் உபயோகமான மற்றும் தேவையான வேலைகளில் கவனம் செலுத்தினாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்
பொழுது, ரிலாக்ஸ் செய்வதற்கு மூவீஸ் (படம்) பார்ப்பது தான் நமக்குக் கைகொடுக்கிறது.
அதனால் நீங்கள் லாக் டௌன் நேரத்தில் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்து நேரத்தை கழிக்கும் விதமாக 10 காமெடி படங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
இப்படங்கள் அனைத்தும் Netflix, Prime போன்ற ஓடிடி பிளாட்பார்மில் உள்ளது. இதை நாங்கள் எந்த குறிப்பிட்ட வகையிலும் வரிசைப்படுத்தாமல் கலந்து இங்கே கொடுத்துள்ளோம்.
Oh baby

சமந்தா நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் ஒரு வித்தியாசமான கதையைக் கொண்டது.
ஒரு வயதான மூதாட்டிக்கு இளமை மறுபடியும் வந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும், அது அவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களைப் ஏற்படுத்தப்போகிறது என்பதனை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
Jackpot

எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் பொழுது போக்குக்காக மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்.
இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் எதார்த்தமாக நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.
Monster

மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு காமெடிப் படமாக இல்லையென்றாலும் அனைவரும் குழந்தைகளுடன்
பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எஸ்.ஜே சூர்யா எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நல்ல மனிதர். அவருடைய வாழ்க்கையில் ஒரு எலி என்னவெல்லாம் செய்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையாக இப்படத்தில் கூறியுள்ளனர்.
Petromax

இப்படம் ஒரு திகில் கலந்த நகைச்சுவைப் படம். திகில் காட்சிகள் ஒன்றும் பெரிதாக இப்படத்தில் இல்லை என்றாலும், நகைச்சுவை காட்சிகள் நன்றாக இருக்கும்.
தமன்னா, பேபி மோனிகா, யோகி பாபு, காளி வெங்கட், முனீஷ்காந்த், ப்ரேம், சத்யன் என்று ஒரு காமெடிப் பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது.
Tamil Padam 2

சிவாவின் நடிப்பில் வெளியான தமிழ்ப் படம் முதல் பாகம் பார்த்தவர்களுக்கு தமிழ்ப் படம் 2-ல் என்ன இருக்கும் என்பது தெரியும். இது ஒரு நல்ல ட்ரோல் படம்.
முதல் படம் அளவிற்கு இல்லையென்றாலும் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்பது உண்மை.
Comali

சமீப காலத்தில் வெளி வந்த படங்களில் இப்படம் வணிகரீதியான ஒரு வெற்றிப்படம்.
இப்படத்தில் லவ், சென்டிமென்ட், சோசியல் மெசேஜ் என பல அம்சங்கள் இருந்தாலும் நகைச்சுவைத் தூக்கலாகவே இப்படத்தில் அமைந்துள்ளது.
ஜெயம் ரவி, யோகி பாபு, ஷா ரா, காஜல் அகர்வால், சம்யுக்தா, கே எஸ் ரவிக்குமார் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
A1

சந்தானம் நடிப்பில் வெளிவந்த A1 ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். சந்தானம் லீட் ரோலில் நடித்த படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது நாமறிந்த உண்மையே.
இப்படம் சில சர்ச்சைகைளை உருவாக்கி இருந்தாலும், ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Sixer

வைபவ் எப்பொழுதும் போல் ஒரு பல்ப் வாங்குகிற மாஸ் காட்டாத ஹீரோவாக நடித்துள்ள படம் சிக்ஸர்.
மாலைக்கண் குறைபாடு உள்ள இவரின் வாழ்க்கையிலும், காதலிலும் வரும் பிரச்சனைகளும், அதை அவர் எப்படி கையாளுகிறார் என்பது தான் இப்படம். இப்படம் ஒரு நல்ல டைம் பாஸாக அமைந்துள்ளது.
Naan Sirithal

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளி வந்த படம் நான் சிரித்தால்
ஒரு நல்ல நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். துக்கம், வருத்தம், டென்ஷன் இவையனைத்தும் வரும் நேரத்தில் இவர் சிரிப்பார்.
அது தான் இவருடைய குறைபாடு. இதனால் அவர் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாக சொல்லிருக்கிறார்கள்.
Gorilla

இப்படம் ஒரு முழு நீள காமெடிப் படம் இல்லையென்றாலும் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்கும் ஒரு என்டர்டைனர்.
மான்ஸ்டர் படத்தில் எலி வருவது போல் இந்தப் படத்தில் ஒரு குரங்கு வரும். நகைச்சுவை கலந்த இப்படம் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
ஜீவா, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் சோசியல் மெசேஜ், பேங்க் கொள்ளை என பல விஷயங்கள் கலந்துள்ளது.
இப்படங்கள் அனைத்தும் ஓடிடி பிளாட்பார்மில் உள்ளது. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் இந்த நகைச்சுவைப் படங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்.
Leave a Reply